கொழும்பின் 9 பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் (Drone கேமரா) மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து விதிமீறல்களை ஆளில்லா விமானங்கள் (Drone கேமரா) கண்காணிப்பு அமைப்பு மூலம் கண்டறிய முடியும் என்பதால், வாகன சாரதிகள் வீதி ஒழுங்கு விதிகளை கடைபிடிக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையுடன் (SLAF) இணைந்து தற்போது கொழும்பு நகரை உள்ளடக்கிய போக்குவரத்து நெரிசலை ஆளில்லா விமானங்கள் மூலம் பொலிசார் கண்காணித்து வருகின்றனர்.
தினமும் காலை 07.00 மணி முதல் 09.00 மணி வரையிலும், மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரையிலும் இந்த திட்டம் அமுலில் இருக்கும்.
ஆளில்லா விமானங்கள் (Drone கேமரா) மூலம் கண்காணிக்கப்படும் ஒன்பது இடங்கள் பின்வருமாறு:
தெஹிவளை
கிருலப்பனை
நெலும் பொக்குனா அரங்கம்
ஆயுர்வேத சந்தி
பொல்கஸ்துவ
நாடாளுமன்ற சுற்றுவட்டம்
பஞ்சிகாவத்தை
மருதானை
களனி பாலம்