நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு நாசகார நடவடிக்கையின் விளைவே என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய பல காரணிகள் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே அதிகாரிகள் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறியுமாறு கேட்டுக்கொள்கிறோம் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எம். விஜேகோன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நியாயமான விசாரணைக்குப் பிறகு இது திட்டமிட்ட சதி எனத் தெரியவந்தால் அதற்குக் காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.