பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்கள் விரைவில் வலுப்படுத்தப்பட வேண்டும் – ரணில் விக்ரமசிங்க

கொவிட் தொற்றுக்கு முகம்கொடுக்கும் நாடுகளை முடக்கியதன் காரணமாக அந்த நாடுகள் தற்போது பல பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக முன்னால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக பிராந்தியத்தில் வர்த்தக உடன்படிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று இடம்பெற்ற இந்து சமுத்திர உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

2050 ஆம் ஆண்டளவில் இந்தியாவிற்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உலகின் முன்னனி பொருளாதார நாடுகளாக மாறும் என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த பிராந்தியங்களில் வர்த்தக ஒப்பந்தங்கள் இன்றி பயனுள்ள பொருளாதாரத்தை பராமரிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here