துபாய் துணைபிரதமர் மற்றும் நிதி அமைச்சரான ஷேக் மக்தும் பின் மொஹமட் ரஷித் அல் மக்தும் (HH Shaikh Maktoum bin Mohammed bin Rashid Al Maktoum) இற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் துபாயின் எக்ஸ்போ- 2020 (EXPO – 2020) கண்காட்சி மைதானத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் 50 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதற்கான சந்தர்ப்பமாக ஜனாதிபதி இதனை பயன்படுத்தி கொண்டார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் கொவிட் பின்னனியில் பொருளாதாரத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து துபாய் துணைப் பிரதமருக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.