நாட்டில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை அண்மித்துள்ளது.
கொவிட் தடுப்பூசி திட்டமானது இன்றும் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 80,394 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 73,454 பேர் மூன்றாவது தடுப்பூசி டோஸ்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதற்கமைய மூன்றாவது தடுப்பூசி டோஸ் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 928,051 ஆக அதிகரித்துள்ளது.