எரிவாயு குழாய் வெடிப்புகள் பற்றிய உண்மையை மறைக்கும் வகையிலயே எல்லாம் நடக்கிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
‘ஈனைல் மக்காப்டைன்” உள்ளடக்கத்தில் உள்ள பிரச்சினை காரணமாக அந்த நிறுவனங்கள் விநியோகம் செய்வதை நிறுத்துவதாக சொன்னாலும், உண்மையான கதை மக்களை ஏமாற்றுவதே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மீகஹஜதுர புராதன விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்
சந்தையில் 72% எரிவாயு ஏகபோகம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும்,தேவைக்கு ஏற்ற விநியோகம் இல்லாததால் அவசரமாக நெருக்கடியில் விழுந்த நிறுவனம் கசிவுத் தடுப்பு தொடர்பான பரிசோதனைகள் நிறுத்தப்பட்டு,எரிவாயு சந்தைக்கு விடப்பட்டது என்றும் தெரிவித்தார். இது முழு நாட்டையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் நாடு முழுவதும் எரிவாயு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்த கொடூரமான குற்றத்திற்கு அரசாங்கம், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனமே பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
இது ஒரு தன்டனைக்குரிய குற்றச் செயல் என்றும்,இது திட்டமிட்ட குற்றமாகும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்த குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.