ஜே.எம். மீடியா கல்லூரியின் முன்மாதிரி களச்சுற்றுலா.
தரத்தையே தனித்துவமாகக் கொண்டு கடந்த 10 வருடங்களாக மிகச் சிறப்பாக இயங்கிவரும் இலங்கையில் அரச டிவெக் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு ஊடகக்கல்லூரியான ஜே.எம். மீடியா கல்லூரியின் களச்சுற்றுலா 2024 மார்ச் மாதம் 03 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களுக்கு எப்போதும் சிறந்த அனுபவ கல்வியை வழங்க வேண்டும் என்ற ரீதியில் ஜே. எம். மீடியா கல்லூரி இந்த களச்சுற்றுலாவை இலங்கையில் இருக்கும் மிகப் பிரபலமான இரண்டு ஊடக நிறுவனங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதனடிப்படையில் இலங்கையில் முன்னணி ஊடக நிறுவனமாக திகழும் தெரண ஊடக வலையமைப்பிற்கு எமது முதலாவது விஜயம் அமைந்திருந்தது. அதிலும் அதை வெறுமனே பார்வையிடாமல் பகல் செய்தி ஒளிபரப்பை நேரடியாக பார்வையிடக்கூடிய சந்தர்பத்தை எமது மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம்.
தொலைக்காட்சி செயற்பாட்டின் ஆரம்பம் தொடக்கம் நிறைவு வரை நடைபெறக்கூடிய செயன்முறைகள் அனைத்தும் சரியான விளக்கங்களுடன் அங்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் மாணவர்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற சந்தர்பங்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதே போன்று தெரன எப்.எம் இல் கலையகத்தை நேரடியாக பார்வையிடும் சந்தர்ப்பத்தையும் எமது மாணவர்களுக்காக நாம் ஏற்பாடு செய்து கொடுத்தோம்.
அரச பாடசாலைகளுக்கும் , பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமது நிறுவனத்திற்கு கள விஜயம் மேற்கொள்ளும் சந்தர்பத்தை வழங்கிவரும் தெரண ஊடக நிறுவனத்திற்கு விஜயம் செய்த முதலாவது தனியார் ஊடக கல்லூரியாக ஜே.எம். மீடியா கல்லூரி இடம்பிடித்திருப்பது எமது தரத்தையும் தனித்துவத்தையும் மீண்டும் மீண்டும் பரைசாற்றுகிறது.
பின்னர் எமது பயணம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம் நோக்கி நகர்ந்தது.
இங்கும் நேரடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைத்து செயன்முறைகளையும் நேரடியாக பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது மட்டுமன்றி குறித்த நிகழ்ச்சியை அறிவிப்பாளர் அறிவிக்கும் போது அருகில் இருந்து பார்வையிடும்; சந்தர்ப்பமும் வழங்கப்பட்டமை பாரிய அனுபவமாகும். இவை அனைத்தும் எமது மாணவர்களுக்கு சிறந்த அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கும் என்பது உறுதி.
ஊடகமும் வாழ்கையும் ஒன்றிப்போனது, எனவே நேர முகாமைத்துவம் என்பது இரண்டிலுமே கடைபிடிக்கப்பட வேண்டியதொன்றாகும். எனவே எமது மாணவர்களும் நேர முகாமைத்துவத்துவத்துடன் இயங்குவதால் இந்த களச்சுற்றுலாவை குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்து குறிப்பிட்ட இடங்களை பார்வையிட்டு குறித்த நேரத்தில் எமது பயணத்தை எந்த வித இடையூர்களும் இன்றி நிறைவு செய்வதற்கு முடியுமாக இருந்தது.
பின்னர் காலி முகத்திடலிற்கு விஜயம் செய்த நாங்கள் கடலலையின் உற்சாகத்தை ரசித்ததுடன் சூரியன் மறையும் ரம்பியமான காட்சியையும் கண்டு மகிச்சியடைந்ததுடன் பின்னர் ஜே.எம். மீடியா கல்லூரியை நோக்கி எமது பயணத்தை ஆரம்பித்தோம்.
ஊடகத் துறை மற்றும் வாழ்கை ரீதியிலான அனுபவங்களை பெற்றுக் கொள்ள ஆர்வம் உள்ள உங்களுக்கு ஜே.எம் மீடியா கல்லூரியின் அடுத்த குழுவில் இணைந்து கொள்ளும் சந்தர்ப்பம் காணப்படுகிறது.
ஜுமைரா முபாரக்


(Join the JM Media brand and become the brand yourself) #jmmedians
#jmmedicollege #tamilmediacourse #announcingcourse #newsreadingcourse #jmmedialk #learnmedia #mediacollege #photography #rjcourse #tamilmediaclass #mediacoursesinhala #mediaclass #Youtube #achivement #mediaclasstamil #fieldtrip #videoediting #tvpresenter #rj #graduation #BMICH #dreamday #AI #studentsfeedback #mediacollege #jmmediacollegesrilanka #vacancies





See insights and ads
Promote
All reactions:
31