கண்டி – மஹியங்கனை பிரதான வீதியை பயன்படுத்துவர்களுக்கான அவசர அறிவிப்பு

பாறைகள் மற்றும் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக கண்டி – மஹியங்கனை பிரதான வீதியான 18 வளைவு வீதியை நேற்று (04) தற்காலிகமாக பொலிஸார் மூடியிருந்தனர்.

மோசமான காலநிலை காரணமாக வீதியின் 13 மற்றும் 14 ஆவது வளைவுகளுக்கு இடையில் வீதியில் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், வீதியின் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

அதன்படி அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, வீதியில் சரிந்து வீழ்ந்த பாறைகளை அகற்றும் பணி இன்று காலை முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் வந்து அப்பகுதியை ஆய்வு செய்து பின்னர் பாறைகள் மற்றும் மண் மேடுகளை அகற்றும் பணியை மேற்கொள்வார்கள் என மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here