நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

Still waters run deep: water safety

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் நீர்வீழ்ச்சியை பார்வையிட மற்றும் நீராட குறித்த தரப்பினர் எல்லவல நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, நீரில் மூழ்கிய குறித்த நபர்களை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் காப்பாற்ற முற்பட்ட போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய தந்தை, 15 வயதுடைய மகன் மற்றும் 11 வயதுடைய மகள் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here