
தற்போது இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் காண்பிக்கப்படாத காரணத்தினால் தொடர்ந்து நாடு முழுவதும் எழுமாறான பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பரிசோதனைகளின் ஊடாக நாட்டில் நிலவும் உண்மையான நிலையை அறிந்து கொள்ள முடியும் என குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதிகளவில் தொற்றாளர்கள் பரவக்கூடிய வழிமுறைகளை இனங்கண்டு கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.