ரஷ்ய − யுக்ரேன் போர் l அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு வெளியானது

யுக்ரேனுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, 350 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.

54 மில்லியன் டொலர் பெறுமதியான மனிதாபிமான பொருட்களை அமெரிக்கா வழங்கவுள்ளது.

சர்வதேச ஸ்விஃப்ட் தகவல் அமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய வங்கிகளை அகற்ற அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

ரஷ்ய மத்திய வங்கியை கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

தமது வான் பரப்பை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த அமெரிக்கா தடை விதித்துள்ளது.

யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள 7வது நாள் தொடர்ந்த வண்ணம் உள்ள பின்னணியிலேயே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் இந்த அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here