ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெலாரூஸின் கோமெல் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை தயார்ப்படுத்தியதாக பெலாரூஸ் தெரிவித்திருந்தது.
இதன்படி, அனைத்து பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கு வருகைத் தந்த நிலையில், பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெலாரூஸ் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எனடொலி க்லாஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் யுத்தம் ஆரம்பமாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில், எதிர்வரும் 24 மணித்தியாலங்கள் யுக்ரேனுக்கு தீர்மானமிக்கது என அந்த நாட்டு ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியிலேயே, தற்போது பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.