தற்போது வரையில் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக ஊடகங்களில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் (Instagram) 400 மில்லியன் பொலொவர்ஸ்களை (Followers) தாண்டிய உலகின் முதல் நபர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ தனதாக்கிக் கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிய ரொனால்டோ, தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
செப்டம்பர் 2021 இல் அவரது கணக்கில் 237 மில்லியன் பொலொவர்ஸ்கள் (Followers) இருந்ததுடன், இதனால் அவர் அதிகம் பொலொவர்ஸ்களை (Followers) கொண்ட இன்ஸ்டாகிராம் (Instagram) பயனாளராக மாறினார்.
அவரது இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்கில் 3242 பதிவுகள் (Post) உள்ளதுடன், ஒவ்வொன்றிற்கும் சராசரியாக 10 மில்லியன் லைக்குகள் (Likes) உள்ளன.