தென் பசுபிக் பெருங்கடலுக்கு அடியிலுள்ள Hunga-Tonga-Hunga-Ha’apai எரிமலை இன்று இரண்டாவது நாளாகவும் வெடித்துள்ளது.
நேற்றைய தினம் இந்த எரிமலை வெடித்துள்ள நிலையில் டொங்கா மற்றும் சமோவா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பினால் கடல் மட்டத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சாம்பல் மற்றும் நீராவி காற்றில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று 5.30 மணியளவில் Nuku’alofa விற்கு அருகில் 1.2 மீட்டர் அளவில் சுனாமி அலை ஒன்று ஏற்பட்டுள்ளது என அவுஸ்திரேலியா வானிலை ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.