இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 24 எண்ணெய்த் தாங்கிகளை ஒதுக்குவதற்கும் லங்கா ஐ.ஓ.சி கம்பனியால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கீழ் எண்ணெய்த் தாங்கித் தொகுதியில் 14 தாங்கிகளை குறித்த கம்பனியின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எஞ்சிய 61 எண்ணெய்த் தாங்கிகளில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 51% வீதமும் லங்கா ஐ.ஓ.சி கம்பனிக்கு 49% வீதமான பங்குரிமை கிடைக்கும் வகையில் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் (பிரைவெட்) லிமிட்டட் எனும் பெயரில் நிறுவப்பட்டுள்ள கம்பனியால் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.