15 வயதிற்கு மேற்பட்ட 29 வயதிற்குட்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை இன்று முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சரவதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிளொக் செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்ப கருவியை பயன்படுத்தி அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் பேரவை தெரிவித்துள்ளது.
இது இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில்சார் தகுதிகள் மற்றும் பிற தகுதிகள் உள்ளிட்ட தரவு வங்கியாக பயன்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இன்று உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டையை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.