900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவிகள் இந்த மாத அளவில் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவிருப்பதாக வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
400 மில்லியன் டொலர் இடமாற்று வசதியிலான நிதி மற்றும் 500 மில்லியன் டொலர் எரிபொருளுக்கான கடன் வசதிகள் என்பன வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிதித் தொகைகள் இந்த மாத இறுதிக்குள் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.