மரக்கறிப் பற்றாக்குறையுடன் அதிகரித்துள்ள மரக்கறி விலைகள்

மலையகத்தின் பிரதான மரக்கறி விற்பனை நிலையமான கெப்பட்டிப்பொல விசேட பொருளாதார வலயத்திற்கு வருகைத்தரும் மரக்கறிகளின் அளவு நாளொன்றுக்கு 50 000 கிலோ கிராமாகக் குறைவடைந்துள்ளது.

மேலும் குறித்த பொருளாதார மத்திய நிலையம் வளரும் காலப்பகுதியில் ஒரு நாளைக்கு 500 000- 700 000 மரக்கறிகள் பெறக் கிடைத்ததாக குறித்த வர்த்தக நிலையத்தின் தொழிற்சங்க செயலாளர் மஹிந்த பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதுடன் மரக்கறிகளிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here