எதிர்வரும் 03 ஆம் திகதி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் ஊடக செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறையோடு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் ஜனவரி 30 ஆம் திகதி திறப்பதற்கு முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை காரணமாக எரிபொருள் பற்றாக்குறையொன்று ஏற்படமாட்டாது என்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.