அதிகரிக்கப்பட்டுள்ள பால்மா விலைகள் தொடர்பில் இன்று (30) அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 1 கிலோ கிராம் பால் மாவின் விலை ரூ 150 ஆல் அதிகரித்துள்ளதுடன் 400 கிராம் பால்மாவின் விலை ரூ 60 ஆல் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் 1 கிலோ பால்மாவின் தற்போதைய விலை ரூ 1345 மற்றும் 400 கிராம் பால்மாவின் விலை ரூ 540 ஆகும்.