புத்தளம் முந்தல் பகுதியில் இன்று காலை வீடொன்றின் முற்றத்தில் எறும்புத்திண்ணி என கூறப்படும் அரிய வகை உயிரினம் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதேசவாசிகள் புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் திணக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று எறும்புத்திண்ணியை உயிருடன் மீட்டு வில்பத்து சரணாலயத்தில் விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த உயிரினமான எறும்புத்திண்ணி எதிரிகளைக் கண்டால் உடலை பந்து போன்று சுருட்டி வைத்துக் கொண்டு தம்மைக் காத்துக் கொள்ளும் குணமுடையது என கண்டறியப்பட்டுள்ளது.
இவ் உயிரினமானது இலங்கையில் அழிவடைந்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.