நாட்டில் “பஞ்ச யுத்தம்” ஏற்பட்டுள்ளது

அரசாங்கம் இன்று “உழவுப் போர்” பற்றி பேசினாலும், நாட்டில் “பஞ்ச யுத்தம்” ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) ஹம்பாந்தோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள சந்தைப்பகுதிகளுக்குச் சென்று ‘மனிதாபிமானத்தின் பயணம்’ எனும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்ததோடு இந் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நகரத்திற்கும் சந்தைக்கும் வந்திருந்த மக்கள் மற்றும் வியாபாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு,நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தயாரிக்கப்பட்ட “குடும்ப ஆட்சியே, நாட்டின் அழிவு” என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரத்தையும் அவர்களிடையே விநியோகித்தார்.

தன்னிச்சையான முடிவுகளின் காரணமாக நாட்டின் விவசாயத்தை அழித்த அரசாங்கம், வீடு வீடாக எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் நாடாக இந் நாட்டை மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

17 வருடங்களுக்கு முன்னர் இயற்கை அனர்த்தமாக வந்த சுனாமி அனர்த்தம் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்து விட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அரசாங்கம் இயற்கை அனர்த்தத்திற்குப் பதிலாக, தாங்களே உருவாக்கிய பேரழிவைக் கொண்டு நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று ‘பொஹொட்டு சுனாமி’யால் முழு நாட்டு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here