இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக விசேட கலந்துரையாடலொன்றை 2022 ஜனவரி 3 ஆம் திகதி நடாத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மேலும் இந்த கலந்துரையாடலுக்காக மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் திறைச்சேரியின் செலயலாளர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வது சிறந்ததென அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.