டொலர் நெருக்கடி குறித்து இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு குறித்து இன்று மத்திய வங்கி ஆளுனர் நிவார்ட் கப்ரால் தெளிவுப்படுத்தவுள்ளார்.
நாட்டில் தற்போது அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இவ்வருட இறுதியில் அந்நிய செலாவணி இருப்பினை 3 பில்லியன் டொலர் வரை அதிகரிக்க முடியும் என மத்திய வங்கி ஆளுனர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அது எவ்வாறு என்று அவர் தெளிவுப்படுத்தவில்லை.
இந்நிலையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலான கேள்விகளுக்கு இன்று இடம்பெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பதிலளிக்கவுள்ளார்.