எரிவாயு வெடிப்பிற்கான காரணம் வெளியானது

வாயுவின் கலவையில் ஏற்பட்ட மாற்றங்களே அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் தலைவர் சாந்த வல்பொல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி குழுவின் அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் நடுப்பகுதி வரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரனைகளின் மூலம் குறித்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here