ஆட்சியை மாற்றுவதற்கு மக்கள் தயாராகிய விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது நாட்டின் மக்கள் பல்வேறு விதங்களில் கஷ்டத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் ஒவ்வொரு காலங்களில் ஒவ்வொன்று வெடிக்கும் எனவும் தற்போது நாடு முழுதும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
எரிவாயு சிலிண்டர்களை வைத்துக் கொண்டு விறகடுப்பில் சமைக்கும் நிலையே இன்று இலங்கையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்தியா,அமெரிக்கா, சீனா என அனைவரிடமும் கடன் பெறுகிறார்கள் எனவும் அவ்வாறு பெற்றேனும் நாட்டின் பிரச்சினைகளை அரசாங்கம் சீர் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இது ஜனாதிபதியின் கடமை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை தேர்தலை நடாத்துமாறு சவால் விடுத்ததுடன்
மக்கள் தீர்வுக்கு இடமளிக்குமாறும் தெரிவித்தார்.