கருவுறாமை சார்ந்த சத்திரசிகிச்சையில் ஈடுபட்டார் என வைத்தியர் ஷாபியை சுற்றி வதந்தி கட்டப்பட்டதாகவும் ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னர் இந்த அரசாங்கம் மதவாதத்தையும் இனவாதத்தையும் உருவாக்குவதற்காக செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(19) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இன்றுள்ள பலர் அதற்கு ஆதரவு வழங்கியதாக தெரிவித்த அவர் பெரும்பான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய ஒரு துறவி இருந்ததாகவும் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களாவது இந்த விவகாரத்தை அரசாங்கம் விசாரித்து வருகிறதாகவும் இன்று யாரையும் கண்டுபிடித்ததாக தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு பொய்களை புனைந்து சமூகங்களுக்கிடையில் வெறுப்பை உண்டாக்கி சந்தேகத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்களாக இருப்பதால் இவர்களுக்கு எதுவும் பலிக்காது என்றும் கருத்தும் தெரிவித்தார்.