ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக அபுதாபியில் உள்ள வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் அஹமட் பின் அலி அல் ஷேக் தெரவித்துள்ளார்.
மேலும் நேற்று அபுதாபியில் இடம்பெற்ற வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரு நாடுகளிட்கிடையேயான இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட 8 ஒப்பந்தங்களில் ஐக்கிய அரபு இராச்சியம் கைச்சாதிட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஹமட் பின் அலி அல் ஷேக் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.