நாட்டில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் மூலக்கூறு உயிரியல் துறையின் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகரித்து வரும் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்தவகையில் இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 என்பதும் குறிப்பிடத்தக்கது.