அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான புதிய உறுப்பினராக அட்டாளைச்சேனை தைக்கா நகரைச் சேர்ந்த ஐ.எல்.எம். றபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (14) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேர்தல் அதிகாரி எம்.டப்ளியு.எம். சுபியான் இதனை அறிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான உறுப்பினராகப் பதவி வகித்த எச்.எம். சிறாஜ் தனது பதவியை ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, மேற்படி றபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
JMMC10 Sharfan