திடீரென்று நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் மறைமுக நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரவணமுல்லை ஸ்ரீ சோமலோக விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற சீனி மோசடியை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னணியில் குறித்த மோசடி தொடர்பான விபரங்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனி மோசடி மூலம் அரசின் வரி வருவாய்க்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு அது 15.9 பில்லியன் ரூபா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
திறைசேரிக்கு இவ்வளவு பண இழப்பை ஏற்படுத்திய மோசடி, சீனி வரி மோசடியே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.