நோர்வூட் ஹெல்பொட தமிழ் மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் தேனீ கொட்டுதலுக்கு ஆளாகியுள்ளனர்.
அதன் காரணமாக கொட்டுதலுக்குள்ளாகிய 17 பாடசாலை மாணவர்கள் திக்ஓய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த தேனீ கொட்டுதலுக்கு இலக்காகியுள்ளவர்கள் தரம் 6 – 11 வயதிற்குட்பட்டவர்களென நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வலயக்கல்விப் பணிமனையின் அறிவுறுத்தலுக்கிணங்க குறித்த பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு தற்காலிக விடுமுறை வழங்கியுள்ளார்.
மேலும் தேனீ கொட்டுதலுக்கு இலக்காகியவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் தேனீக்களின் பரவல் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.