உலகளாவிய ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய புரட்சி

0
6


கொழும்பு போர்ட் சிட்டியில் ‘பிரைம் மெரினா’ என்ற புதிய உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர குடியிருப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Prime மற்றும் Melwa ஆகிய இரு வலிமைமிக்க நிறுவனங்களின் இந்தக் கூட்டுத் திட்டம் , தெற்காசியாவில் ஆடம்பரக் குடியிருப்பு வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய தரநிலையை ஏற்படுத்தியுள்ளது.

Prime மற்றும் Melwa ஆகிய நிறுவனங்கள் இணைந்து, கொழும்பு போர்ட் சிட்டியில் ‘பிரைம் மெரினா விற்பனைத் தொகுப்பை பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தியுள்ளன.

இது இப்பிராந்தியத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தளமாகும்.

கொழும்பு போர்ட் சிட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்முகப்புப் பாலம், இந்தியப் பெருங்கடல் மற்றும் மெரினா ஆகியவை ஒன்றிணையும் மிகத் துல்லியமான மையப்புள்ளியைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.

இங்கு 1, 2, 3 மற்றும் 4 படுக்கையறைகளைக் கொண்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் அமையவுள்ளன.

இதன் கட்டிடக்கலையை சிங்கப்பூரின் ‘P&T Singapore’ நிறுவனமும் , உள்துறை வடிவமைப்பை ‘Index Design Pvt Ltd’ நிறுவனமும் , மற்றும் இயற்கை சூழல் வடிவமைப்பை ஐக்கிய இராச்சியத்தின் ‘Grant Associates’ நிறுவனமும் மேற்கொள்கின்றன.

Prime Group இன் இணை-தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது இலக்கு இலங்கை அல்ல எமது இலக்கு உலகமாகும்’ எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here