பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐ.நா அவதானம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள, திருத்தப்பட்ட பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் அணுகுமுறையின் அர்த்தமுள்ள சீர்திருத்தத்திற்கான திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்று பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டமூலம், முன்னதாக இருந்த சட்டத்தை போலவே உள்ளது என்றும் அந்த பேரவை குறிப்பிட்டுள்ளது.

இது ‘பயங்கரவாதத்தின்’ செயல்களை பரந்த அளவில் வரையறுக்கிறது.

குறிப்பாக தடுப்புக் காவல் உத்தரவுகளின் சட்டப்பூர்வமான சவால்கள் தொடர்பாக நீதித்துறை உத்தரவாதங்களின் வரம்பைக் கட்டுப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

அத்துடன் தடுப்புக்காவல் இடங்களை கண்காணிக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உரிமையும் இதன் ஊடாக மட்டுப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் தற்போதைய வடிவில் நிறைவேற்றப்பட்டால், அவ்வாறான அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு நிறைவேற்று அதிகாரத்திற்கு அதிக அதிகாரம் வழங்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்டமூலத்தை கணிசமான அளவில் திருத்தியமைத்து, அது இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு முழுமையாக இணங்கும் வகையில்,  சிவில் சமூகம் மற்றும் ஏனைய தரப்பினருடன் அர்த்தமுள்ளவாறுதொடர்புப்படும் வகையிலும், முன்வைக்குமாறு  இலங்கை அரசாங்கத்திடம் கோருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here