கடும் பனிப்புயல் – அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் சமீபத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 24 ஆம் திகதி அங்கு கடுமையான புயல் வீசி கனமழை பெய்தது.

இதில் மிசிசிப்பியில் உள்ள கரோல், ஹம்ப்ரீஸ், மன்ரோ மற்றும் ஷார்கி ஆகிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. அங்கு மின் கம்பங்கள் சரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் பலர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர்.

இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டது. எனினும் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பில் 14 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் டஜன்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனத்தை அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இதன் மூலம் அங்கு இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here