உலக மக்கள் தொகையில் சுமார் 81 கோடி பேர் இரவு உணவு இன்றி உறங்க செல்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் அவையின் உலகலாவிய மனிதவள ஆய்வு 2022 ஆம் ஆண்டு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய தொற்று நொய், பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் மனித வாழ்வில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய உலகளவில் பசியால் வாடும் மக்களின் தொகை 81.1 கோடியாக அதிகரித்துள்ளது.
இது கடந்த வருடத்தை விட 16 கோடி அதிகமாகும்.
இவ்வாறு உணவு பற்றாக்குறை உள்ள நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது என குறித்த ஆய்வு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.