நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள்!

1756 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால் கண்டி அரச மாளிகையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட வாள் மற்றும் பீரங்கி உட்பட 6 கலைப்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து இன்று (29) மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த கலைப்பொருட்களில் கிர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் திருமண வாள், பீரங்கி மற்றும் 2 பெரிய துப்பாக்கிகள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 05.05 மணி அளவில் ஜேர்மன், பிராங்பேர்ட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-554 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தொல்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர இங்கிலாந்து உட்பட சுமார் 20 வெளிநாடுகளில் இந்த இலங்கையில் இருந்து திருடப்பட்ட தொல்பொருட்கள் பெருமளவு இருப்பு உள்ளதுடன், இந்தப் பொருட்களும் எதிர்காலத்தில் இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here