ஸ்பூட்னிக் தடுப்பூசியை பெற்றவர்கள் நாட்டிற்குள் நுழைய சவுதி அரேபியா அனுமதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்மூலம் மக்கா மற்றும் மதீனாவில் நடைபெறும் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளில் கலந்துக் கொள்ளவும் இது சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
தடுப்பூசி பெற்றுக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் நுழைந்து 48 மணி நேரங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னர் PCR பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் சவுதி அரேபிய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.