இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள எல்.பீ.எல் போட்டிகள் நாளை (05) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மொத்தமாக 24 போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் நாளை தொடக்கம் 23 ஆம் திகதி வரை குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஆரம்பப் போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடமபெறவுள்ளதுடன் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஹம்பாந்போட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானதத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.