இரண்டு சர்வதேச போட்டிகளுக்கு சர்வதேச கால்ப்தாட்ட சம்மேளனம் இலங்கைக்கு தடை

இலங்கை கால்பந்து அணி இரண்டு போட்டிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவிக்கின்றது.

இதற்கான கடிதத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, எதிர்வரும் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கட்டாரிலல் நடைபெறும் 23 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான போட்டிகளுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கால்பந்து அணிக்கு கடந்த ஜனவரி மாதம் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தடை விதாத்திருந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சரினால் நடத்தப்பட்ட கால்பந்து தேர்தலில் மூன்றாவது தரப்பின் தலையீடு இருந்துள்ளதாக தெரிவித்தே, இந்த தடை பிறப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here