
இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று (20) திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், 100 பெளத்த பிக்குகளுடனான இலங்கை விமானத்தை குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த குழுவில், அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரும் அடங்குவதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று (20) இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.