
20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அதனடிப்படையில் இன்றைய தினம் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி 20 ஓவர்கள் சகல விக்கெட்களையும் இழந்து அவர்கள் 106 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் Curtis Campher தொடர்ந்து 4 பந்துகளில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.