2022 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்களுக்கான ஏலம் இன்று இந்தியாவில் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் ஆரம்பித்து சில நேரத்தில் ஏலம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஏலத்தில் முன்னணியில் இருக்கும் மூத்த ஏலதாரர் ஹக் எட்மீட்ஸ் ஏலத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஏலத்தை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.