உலக கிண்ண போட்டிக்கு செல்லும் இலங்கை இளையோர் அணி

2022 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிகெட் போட்டிக்கு இன்றைய தினம் டுபாயிலிருந்து மேற்கிந்திய தீவுக்கு இலங்கை அணி பயணித்துள்ளது.

உலக கிண்ண தொடரின் ‘டி’ குழுவில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுடன் இலங்கை விளையாடவுள்ளது.

19 வயதிற்குட்பட்ட இலங்கை அணியின் முதல் போட்டி ஸ்கொட்லாந்து U19 அணிக்கு எதிராக ஜனவரி 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அந்த போட்டியை தொடர்ந்து 17 ஆம் திகதி அவுஸ்திரேலியா U19 அணியுடனும் 21 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் U19 அணியுடனும் ஆரம்ப சுற்றில் போட்டியிட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here