50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழலும் பூமி

பூமி தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதாவது சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகள் இதனை அணுக்கடிகாரத்தின் வாயிலாக கண்டுபிடித்துள்ளனர்.
அணு கடிகாரம் மிகவும் துல்லியமானது மற்றும் முழுமையான பூஜ்ஜியத்திற்கு குளிரூட்டப்பட்ட அணுக்களில் எலக்ட்ரான்களின் இயக்கத்தை அளவிடுகிறது. எனவே விஞ்ஞானிகளால், 1972 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை லீப் வினாடிகள் சேர்க்கப்பட்டு, பூமியின் சுழற்சியில் உள்ள வினாடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அணுக் கடிகாரத்தை வைத்திருக்கின்றனர்.
பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பதனால், விஞ்ஞானிகள் அணு கடிகாரத்தை 1 வினாடி குறைக்கிறார்கள்.
இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி பீட்டர் வைபர்லி கூறுகையில், சுழற்சி வேகம் மேலும் அதிகரித்தால், நாம் ஒரு வினாடியைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
பூமியின் மையப்பகுதி, பெருங்கடல்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here