இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ளது.
2-வது டெஸ்ட் ஜோகன்ஸ் பர்க்கிலும் (ஜனவரி 3-7), கடைசி டெஸ்ட் கேப் டவுனிலும் (ஜனவரி 11-15) நடைப்பெறவுள்ளது. அதைத்தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைப்பெறவுள்ளது.
முன்னதாக இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்தாலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக டெஸ்ட் தொடர் 9 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் 3 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
மும்பை வந்த இந்திய வீரர்கள் விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளை வரை வீரர்கள் தனிமையில் இருப்பார்கள். எதிர்வரும் 16 ஆம் திகதி இந்திய அணி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறது