தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு

தொடர்ச்சியான மழை காரணமாக மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் கங்கை மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

இதனால் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல், பதுளை போன்ற மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *