6.4 லட்சம் டாலர்களுக்கு ஏலம்போன ரோமங்கள் உள்ள யானை எலும்புக்கூடு

பிரான்ஸின் லையான் நகரில், பழங்கால ரோமங்கள் உள்ள யானையின் எலும்புக்கூடு, 6.4 லட்சம் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு தனியார் நிறுவனத்திடம் உள்ள, மிகவும் விலை உயர்ந்த பழங்கால ரோமங்கள் உள்ள யானை எலும்புக்கூடு இதுவாகும்.

இதிலுள்ள 80% எலும்புகள் உண்மையானவை என்பதால், இது, மிகவும் அறியவகையாகும். மீதமுள்ள 20 சதவிகிதம், பிசின் கலந்து, அதன் உருவம் முடிக்கப்பட்டுள்ளது.

இந்த எலும்புக்கூடு, ஒரு ஆண் யானையாகும். இது சைபீரியாவின் நிரந்தர பனிக்கட்டிகளில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பற்களில் அழுகல் தன்மையை பார்ப்பதாக கூறும் விஞ்ஞானிகள், அதன் இறப்பிற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

நிரந்தரப் பனிக்கட்டிகள், பல பெரிய மிருகங்களை கண்டறிவதை அதிகப்படுத்தியுள்ளதாக, மான்செஸ்டர் அருங்காட்சியகத்தின் புவி அறிவியல் பிரிவின் பொறுப்பாளரான டேவிட் கெல்ஸ்த்ரோப் பிபிசியிடம் தெரிவித்தார்.

யூக்கா என்னும் 39,000 ஆண்டுகள் பழைய யானை

`புவியியல் மாற்றங்களால், சைபீரியாவிலுள்ள நிரந்தரப்பனிக்கட்டிகள் மிகவும் வேகமாக உருகிவருகின்றன` என்று அவர் கூறினார்.

`நாம், மிகவும் சிறப்பான எலும்புக்கூடுகளை மட்டும் எடுக்கவில்லை. அவை இறந்த நிலையில் எடுக்கிறோம். அதன் ரோமங்கள், தோல், உடல் உறுப்புகள், கடைசியாக சாப்பிட்ட உணவுடன் கூட கிடைக்கின்றன` என்றார்.

பண்டைகால மனிதனோடு, இந்த ரோமங்களுடைய யானைகள் வாழ்ந்துள்ளன. அவற்றை வேட்டையாடுபவர்கள், குகைகளில் அந்த படங்களை வரைந்துள்ளனர்.

அந்த பகுதியில் இருந்த பெரும்பான்மையான மிருகங்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டன. அதன் கடைசி குழு மட்டும், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆர்க்டிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழ்ந்துள்ளன.

இவற்றின் அழிவிற்கு, புவியியல் மாற்றங்களும், மனிதர்களின் வேட்டையாடும் செயல்களுமே காரணமாக இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *