கைதிகளுக்கு இணையவழி மருத்துவ ஆலோசனை வழங்கும் திட்டம்

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் ஸ்கைப்தளத்தைப் பயன்படுத்தி சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்றைத் தொடங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

‘டெலி மெடிசின்’ என்றழைக்கப்படும் இந்த திட்டம் சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் துஷார உபுல்தேனிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்

சிறைகளில் இருக்கின்ற சில கைதிகளுக்கு சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையை நாடும் அவசியம் ஏற்படுவதாக கூறிய அவர், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறப்பு மருத்துவர்கள் சிறைச்சாலைக்குள் வந்து கைதிகளை பார்வையிட மறுப்பு தெரிவித்து வருவதாக கூறினார்.

மேலும், கைதிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியாக பல சிக்கல்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை: கைதிகளுக்கு ஸ்கைப் மென்பொருள் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்க திட்டம்

இதன் காரணமாக, இணைய வழிக் காணொளி உரையாடல் தளமான ஸ்கைப் மூலம் சிறப்பு மருத்துவர்கள் கைதிகளுக்கு சிகிச்சை ஆலோசனை வழங்கும் திட்டத்தை தொடங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சுகாதார அமைச்சகத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் சிறைக் கைதிகள் தங்களது சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமென்று ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தேனிய மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *