ஏலத்தில் சாதனை படைத்த லியோனார்டோ டாவின்சி வரைந்த ‘இயேசுநாதர்’ ஓவியம்

லியோனார்டோ டாவின்சியால் வரையப்பட்டது என்று நம்பப்படும் 500 ஆண்டுகள் பழமையான இயேசுநாதர் ஓவியம் ஒன்று நியூயார்கில் நடந்த ஏலத்தில் 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இந்த ஓவியம் சல்வேட்டர் முண்டி, அதாவது உலகின் ரட்சகர் என்று அழைக்கப்படுகிறது.

கிறிஸ்டின் ஏல அறையில் இதுவரை எந்த கலைப்படைப்பும் பெறாத ஏலத்தொகையையும் மற்றும் ஆரவாரம் மற்றும் கைத்தட்டல்களை இந்த ஓவியம் பெற்றுள்ளது.

1519ல் உயிரிழந்த லியோனார்டோ டாவின்சியின் 20க்கும் குறைவான ஓவியங்களே தற்போது மிஞ்சியுள்ளன.

1505 ஆம் ஆண்டிற்கு பிறகு வரையப்பட்டதாக கருதப்படும் இந்த சல்வேட்டர் முண்டி மட்டும்தான் தனியாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த ஓவியத்தின் இறுதி ஏலத்தொகை $400 மில்லியன்கள் என்றாலும், மற்ற கட்டணங்களையும் சேர்த்து மொத்த தொகையானது $450.3 மில்லியன்களை தொட்டது. தொலைபேசி வாயிலாக ஏலத்தில் பங்கேற்ற அடையாளம் தெரியாத நபரொருவர் இருபது நிமிடங்களில் இதை விலைக்கு வாங்கினார்.

இந்த ஓவியத்தில் இயேசுநாதர் ஒரு கையை மேலெழுப்பியும், மற்றொரு கையில் கோள வடிவ கண்ணாடியையும் ஏந்தியுள்ளார்.

இந்த ஓவியம் 1958 ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த ஏலத்தில் $60 அமெரிக்க டாலர்கள்க்கு விற்கப்பட்டது. ஆனால், அப்போதுவரை இது லியோனார்டோ டாவின்சியின் பின்தொடர்பாளர் ஒருவரால் வரையப்பட்டது என்றும், அது டாவின்சியால் உருவாக்கப்படவில்லை என்றும் கருதப்பட்டது.

தற்போதுகூட, இது லியோனார்டோவின் படைப்பாக இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று பிபிசி ஆர்ட்ஸ் நிருபர் வின்சென்ட் டவுட் கூறுகிறார்.

ஓவியத்தின் மேற்பரப்பு “மந்தமாக, வார்னிஷ் செய்யப்பட்ட, செயற்கையாக, அழுத்தி தேய்த்து, மீண்டும் பல முறை வரையப்பட்டதால் ஒரே சமயத்தில் பழையதாகவும், புதியதாகவும் தெரிவதாக” விமர்சகர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், கிறிஸ்டி இந்த ஓவியத்தை நம்பகமானதாகவும், “20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கலை ரீதியான கண்டுபிடிப்பாகவும்” கூறியுள்ளது.

2005யில் சல்வேட்டர் முண்டி மீண்டும் பேசப்பட்டபோது, “இறந்த டாவின்சி” பற்றிய நினைவை உண்டாக்கியது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரஷ்ய சேகரிப்பாளரால் இது 127.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டது. ஆனால் அது தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டதே தவிர ஏலத்தில் இல்லை.

நியூ யார்க்கில் போருக்கு பிந்தைய மற்றும் சமகால கலை குறித்த கிறிஸ்டியின் இந்த ஏலத்தில் இடம்பெற்ற இந்த ஓவியத்தின் ஆரம்ப விலையாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *